அருள்மிகு காளத்தியப்பர்:
கண்ணப்பன் கடைத்தேற கண்லீலை புரிந்தவனே
கண்ணுதற் கடவுளே கடைக்கண் பாரய்யா
அண்டசராசரம் அனைத்தையும் காக்கவே
கண்டத்திலே விடத்தை கட்டிய சுந்தரனே
விண்ணவரை மீட்டு வீணரை வீழ்த்தவே
கண்ணின்று கனலாக கந்தனை தந்தவனே
பண்ணும் பரதமும் படைத்த பரமனே
எண்ணமெல்லாம் நீயே ஏழைப் பங்காளனே