அருள்மிகு குற்றால நாதர்
கடல்சூழ் உலகினை காத்தருள் புரியவே
விடம்தனை குடித்த விரிசடையோனே
கடல்நீர் வண்ணன் கரத்தினில் மின்னும்
சுடர்ஆழி தந்த சுந்தர மூர்த்தியே
கடல்நீர் அனைத்தும் குடிநீராக்கிய
குடமுனி மகிழவே குற்றாலந்தனிலே
படமெடுத்தாடும் பன்னகம் அணிந்து
நடம்புரிகின்ற நாதனே அருள்வாய்