அருள்மிகு கூடல் நாயகன்:
பாடல் மதுரையில் பிறவி எடுக்கவே
கூடல் நாயகன் கருணை வேண்டுமே
ஆடல்பலபுரிந்து ஆலாலசுந்தரன்
அடியவர்க்கிரங்கி நடந்து வந்தருளிய
கிழவிக்கு அருளவே கூலியாளாய் நடந்தான்
வாணன் புகழ்பாட விறகுடனே நடந்தான்
வளையல் விற்கவே வணிகனாய் நடந்தான்
தருமிக்கருளவே புலவனாய் நடந்தான்