அருள்மிகு கூத்தபிரான்;
அழைத்த போதே அருள்புரிபவனே
குழையணிந்தாடும் கூத்தபிரானே
மழைமுகில் வண்ணனும் மலரவனும் காண
விழைந்தும் அறியாத விரிசடை சுந்தரனே
பழவினை போக்கிடும் பாம்பணி கண்டனே
கழலினைப் பணிந்தேனே காலபைரவனே
உழவும் தொழிலும் உலகினில் செழிக்கவே
அழல் வண்ணனே அருள் புரிவாயே