அருள்மிகு சங்கரன்:
அங்கமெல்லாம் சிலிர்க்குதடி தோழி
தங்கநிற மேனியனாம் சங்கரன் புகழ்கேட்டு
அங்கத்திலே பாதி அன்னைக்கு அளித்தவனாம்
பங்கய கண்ணனுக்கு சக்கரம் தந்தவனாம்
ஆலம்தனை அருந்தி அண்டத்தை காத்தவனாம்
பாலனை காக்கவே காலனை கடிந்தவனாம்
ஆலவாய் நகரினிலே ஆடல்பல புரிந்து
சீலமிகு அடியவர்க்கு அருளிய சுந்தரனாம்