அருள்மிகு சங்கரன்:
மதியுடன் நதியும் மலரும் தலைசூடி
சதிபாதியாய் நின்ற சங்கரனே அருள்வாய்
சதிமனம் நோகவே சதிசெய்த மாமனின்
மதியினை சரிசெய்த மகேசனே சுந்தரனே
ரதிமனம் மகிழவே பதியினை தந்தவனே
விதியினை மாற்றிய வீரட்டேஸ்வரனே
உதிக்கும் கதிரவன் நிறம் உடையானே
எதிலும் எங்கும் நிறைந்திருப்பவனே