அருள்மிகு சாம்ப சதாசிவன்:
சடைமுடி சுந்தரனே சாம்ப சதாசிவனே
அடைக்கலம் தந்தெனக்கு அருள் புரிவாயே
விடை மீதேறியே வீதிவலம் வந்து
கடைக்கண் நோக்கியே கருணை புரிகின்ற
ஆழி சூழ் உலகினை அருள்வலம் வருகையில்
காழியூர் பிள்ளைக்கு கனிவுடன் அருளிய
ஊழிமுதல்வனே உமையொரு பாகனே
ஏழிரண்டுலகிற்கும் எழுந்தருள் புரியும்