அருள்மிகு சிவன்;
ஆலின் கீழமர்ந்த ஆலால சுந்தரனே
பாலித்தருள்வாயே பரமதயாளனே
ஆலிலைக்கண்ணனும் அயனும் அறியாத
சூலினி மணாளனே சூலாயுத பாணியே
காலினால் முயலகனை காலனை கடிந்தவனே
கூலிக்கு மண் சுமந்த கூடல் நாயகனே
வாலியை வதைத்த வேந்தனும் வணங்கிய
வேலியாய் நின்ற வேணுவனநாதனே