அருள்மிகு சுந்தரேசர்:
மான்மழு சூலமும் மத்தமும் ஏந்திடும்
வான்மதி சூடிய விமலனே அருள்வாய்
மீன்கொடி பறக்கும் மதுரை நகரினிலே
மீன்விழி மங்கையை மணந்த சுந்தரனே
நான்முகன் நாரணன் நாடியும் காணாத
நான்மறை புகழும் நாதனே நிமலனே
நான்மாடக்கூடல் நாயகனே சிவனே
நான் உ்னைப் பணிந்தேனே நஞ்சணிகண்டனே