அருள்மிகு சுந்தர மகாலிங்கம் சதுரகிரி:
சதுரகிரி சுந்தர மகாலிங்கமே உன்னை
சரணடைந்தேனே சதாசிவ சங்கரனே
மதுர மொழிபேசும் மலைமகள் நாதனே
மாமலையில் வாழும் சித்தர்கள் தலைவனே
ஆடி அமாவாசையிலே அண்ணலே உனைக்காண
கூடியே பக்தியுடன் குன்றேறியே வந்து
பாடிப் பணிந்தோமே பரம தயாளனே
நாடிய வரம்யாவும் நல்கிடுவாயே