அருள்மிகு சோமசுந்தரர்:
கங்கை தலை சூடி வைகை கரை வந்த
மங்கை பாகனே மனம் இரங்கிடுவாயே
சங்கை ஏந்திய மங்கை மார்பனின்
தங்கை கரம் பிடித்த சோம சுந்தரனே
சங்கை அரிந்துண்ட நக்கீரர்க்கருளிய
அங்கையில் அனல்ஏந்தி ஆடும் அண்ணலே
மங்கையர்க்கரசி பணிசெய்து பரவிய
கங்கையில் மலர்ந்த கந்தனை தந்தவனே