அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி:
கல்லாலின் கீழமர்ந்த கலைகளின் நாயகனே
சொல்லாலே பாமாலை சூட்டிடுவோம் சுந்தரனே
தொல்காப்பியம் தனில் தொடங்கிய தமிழுக்கு
தலைச்சங்க தலைவனாய் அமர்ந்த பெருமானே
சனகாதி முனிவருக்கு சின்முத்திரை காட்டி
மௌன குருவாக மறைகளை தந்தவனே
குருவாரத்தில் உன்னை கும்பிட்டு வருபவர்க்கு
திறமைகளை தந்திடும் தென்முகக்கடவுளே