சிவன்

அருள்மிகு தாயுமான சுவாமி, திருச்சிராப்பள்ளி:

சிராப்பள்ளி மேவிய சிவபெருமானே
பராமுகம் காட்டாமல் பரிந்தருள்புரிவாயே

சராசரம் எலாம் புரக்கும் பராபரமே
மட்டுவார்குழலி மனங்கவர் மணாளனே

மரவுரி தரித்த மன்னனும் போற்றிய
சரமலர் கொன்றை சூடிய சுந்தரனே
தரணியை காத்திடும் தாயுமானவனே
பரமனே உந்தன் பதமலர் பணிந்தேனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.