அருள்மிகு தேனுபுரீஸ்வரர், மாடம்பாக்கம்:
தேடிஉனைக் கண்டேனே தேனுபுரீஸ்வரா
பாடிஉனைப் பணிந்தேனே பரமனே அருள்வாயே
நாடிவரும் அடியவர்க்கு நல்லருள் புரிந்தே
கோடிநலம் கொடுப்பவனே கொன்றை அணிந்தவனே
ஆடிடும்உன் பாதத்தை அம்பலத்தே தரிசித்தால்
ஓடிடும் வினையாவும் உன்னருட் பார்வையிலே
ஈடிலா இறைவனே ஈசனே சுந்தரனே
கேடிலா கல்வியும் செல்வமும் தருவாயே