அருள்மிகு தேனுபுரீஸ்வரர், மாடையம்பதி(மாடம்பாக்கம்)
பிறைசூடும் பெருமானே புலித்தோலை புனைவோனே
பறைகொண்டு உன்னையே பாடி பணிந்தேனே
மறைகளின் நாயகனே மாடையம்பதியோனே
உறைபனி மீதமர்ந்து உலகினை காப்பவனே
கலைகளின் தலைவனே காலனை உதைத்தவனே
அலைகடல் எழுப்பிய ஆலத்தை உண்டவனே
மலைமகள் மணாளனே மாலறியா மலையானே
வலைவீசி மீன்பிடித்த சுந்தரனே அருள்வாயே