சிவன்

அருள்மிகு பஞ்சபூத நாயகன்:

பஞ்சபூத நாயகனே பூமிநாதனே உன்னை
தஞ்சமடைந்தேனே கஞ்சி ஏகம்பனே

நஞ்சணிகண்டனே நாகமணிந்தவனே
சஞ்சலம் போக்கிடும் சதாசிவ சுந்தரனே

ஆடும் அம்பலத்தே ஆகாயமானவனே
காளத்தி தனிலே காற்றாக காட்சி தந்து
அண்ணாமலையினிலே அக்னியாய் நின்றவனே
ஆனைக்காவினிலே ஆழிநீராய் ஆனவனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.