அருள்மிகு விருத்தகிரீசுவரர்:
விருத்தகிரி அமர்ந்த உருத்திரனே உந்தன்
திருவடி பணிந்தேனே திருவருள் புரிவாயே
திருமுறை போற்றும் அருமறை நாயகனே
தருநிழல் கீழமர்ந்த தென்முக கடவுளே
புரிசடை புனல்சூடி புன்னகை புரிந்தே
திரிபுரம் எரிசெய்த விரிசடை விமலனே
பரிவுடனே சுந்தர மூர்த்திக்கு பொன்தந்த
வரிபுலி தோலுடனே கரியுரி தரித்தவனே