முருகன்

அருள்மிகு கந்தன்:

கேட்கவும் வேண்டுமோ கந்தனே உன்னிடம்கருணை புரி என்று உருகி உனை நினைத்து கேட்காமலே தரும் வள்ளலும் நீயென்றேபாட்டெழுதி வைத்தாரே பண்டிதரும் அன்றே முருகா என்றே ஒருமுறை அழைத்தாலேஇருகரம் கூப்பியே திருவடி பணிந்தாலேகுருவாகவே வந்து அருள்புரிவாய் என்றஅருணகிரிக்கருளிய ஆறுமுக சுந்தரனே

முருகன்

அருள்மிகு செங்கோட்டு வேலன்:

மங்கையொரு பாகனுடன் மலைமீதமர்ந்தசங்கரன் மைந்தனே செங்கோட்டு வேலவனே மங்கை உறை மார்பன் மருகனே குகனேசங்கத்தமிழ் தந்த சண்முகசுந்தரனே விந்தை பலபுரிந்து வீணரை வீழ்த்தியேசிந்தை கவர்ந்தவனே சிங்கார வேலனேஎந்தையும் தாயுமாய்‌ எனைக் காத்தருளும்கந்தையனே கடம்பா கார்த்திகை பாலனே

முருகன்

அருள்மிகு கந்தசுவாமி, கந்தகோட்டம்:

கந்தகோட்டத்துறை கந்தவேளே எனக்குதந்தையும் நீயே தாயும் நீயே அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியன்தந்திட்ட சுந்தரனே தயை புரிவாயே அருட்பா வள்ளலும் அடியவரும் போற்றும்திருப்போரூர் உறை திருமால் மருகனேமுத்திக்கு வித்தான முத்துக்குமாரனேஅத்திமுகன் தம்பியே ஆறுமுகவேலவனே

முருகன்

அருள்மிகு கார்த்திகை பாலன்

நினைவெல்லாம் நீதானே நீலமயில் வாகனனேஉனையன்றி எனக்கருள எவருண்டு உலகிலே வினை நீங்க வேலுண்டு வரம் தர நீயுண்டுகனவிலும் உனை மறவேன் கார்த்திகை பாலனே பாலோடும் பழமோடும் காவடி ஏந்தி நின்பால்முகம் காணவே பழனிக்கு வந்தேனேபாதி மதி சூடும் சுந்தரன் மைந்தனேபாமர நேசனே பரிவுடன் அருள்வாயே