சிவன்

அருள்மிகு ஆலவாய் அண்ணல்:

அநாதியானவனே ஆலவாய் அண்ணலேஅநாதரட்சகனே அருள் புரிவாயே பிநாகம் ஏந்திய பரம தயாளனேசநாதனம் நிலைக்க சாத்திரம் தந்தவனே செங்கண் மாலுக்கு சுதர்சன சக்கரமும்பார்த்தன் தவம்கண்டு பாசுபதமும் தந்துஇன்னிசை பொழிந்த இலங்கை வேந்தனுக்குசந்திரஹாஸ வாள் தந்த சுந்தரனே

சிவன்

அருள்மிகு ஆலவாய் அண்ணல்:

குலமொன்றில்லாத கூத்தனே எந்தன்குலதெய்வம் நீயே காத்தருள்புரிவாயே அலகில் சோதியனே ஆலவாய் அண்ணலேஉலகில் உயிர்க்கெலாம் உணவளிப்பவனே வலதுபதம் தூக்கி வெள்ளியம்பலத்திலேசலங்கை அணிந்து சதிராடும் சுந்தரனேமலருடன் கிளிஏந்தும் மங்கை மணாளனேகுலச்சிறைக்கருளிய கண்ணுதற்கடவுளே

சிவன்

அருள்மிகு சிவன்;

ஆலின் கீழமர்ந்த ஆலால சுந்தரனேபாலித்தருள்வாயே பரமதயாளனே ஆலிலைக்கண்ணனும் அயனும் அறியாதசூலினி மணாளனே சூலாயுத பாணியே காலினால் முயலகனை காலனை கடிந்தவனேகூலிக்கு மண் சுமந்த கூடல் நாயகனேவாலியை வதைத்த வேந்தனும் வணங்கியவேலியாய் நின்ற வேணுவனநாதனே