முருகன்

அருள்மிகு ஆறுமுக வேலன்:

அந்தி நிறத்தோனே ஆறுமுக வேலவனேஇந்திரன் மருமகனே இருபதம் பணிந்தேனே சந்திரன் சூடிடும் சங்கரன் மகிழவேமந்திரப் பொருள் உரைத்த முருகனே குகனே விந்திய மலையினை அடக்கிய அகத்தியர்க்குமுந்தி தமிழ் தந்த கந்தனே சுந்தரனேகுந்தியின் மைந்தரை காத்தவன் மருகனேவந்தித்தேன் உன்னை வரமருள்வாயே

முருகன்

அருள்மிகு செங்கோட்டு வேலன்:

மங்கையொரு பாகனுடன் மலைமீதமர்ந்தசங்கரன் மைந்தனே செங்கோட்டு வேலவனே மங்கை உறை மார்பன் மருகனே குகனேசங்கத்தமிழ் தந்த சண்முகசுந்தரனே விந்தை பலபுரிந்து வீணரை வீழ்த்தியேசிந்தை கவர்ந்தவனே சிங்கார வேலனேஎந்தையும் தாயுமாய்‌ எனைக் காத்தருளும்கந்தையனே கடம்பா கார்த்திகை பாலனே

முருகன்

அருள்மிகு செங்கதிர் வேலன்:

செய்வதொன்று அறிவேனே செங்கதிர் வேலனேமெய்யன்புடனே உன் மலரடி தொழுவதே உய்வதற்கு உனையன்றி உறுதுணை எவரைய்யாஐயமும் ஏதைய்யா ஆறுமுக வேலைய்யா பால் வண்ணன் பாலனே பன்னிரு கையோனேமாலவன் மருகனே மந்திரப் பொருளோனேவேலுடன் மயிலேறி வலம்வந்த சுந்தரனேகோலுடன் மலையேறி காட்சிதரும் கந்தனே

முருகன்

அருள்மிகு கதிர்வேல் முருகன்:

கிரிமகள் மைந்தனே கந்தனே சுந்தரனேகரிமுகன் சோதரனே காத்தருள் புரிவாயே கிரிதரன் மருகனே கார்த்திகேயனேபுரிசடை பரமனின் புதல்வனே குகனே கிரிதனை தகர்த்த கங்கை பாலனேஅரிமுகனை அழித்த ஆறுமுக வேலவனேவரிவளை அணிந்த வள்ளி மணாளனேகரிமகள் கரம்பிடித்த கதிர்வேல் முருகனே