விநாயகனே சரணம்
ஆனை முகத்தோனே ஐந்து கரத்தோனே
வினைகளை தீர்க்கும் விநாயகனே சரணம்
தேனை உனக்களித்த அவ்வைக்கு அருளியவா
ஆனை உருவுடனே அழகனுக்குதவியவா
ஆற்றங்கரை யினிலே அரசின் கீழமர்ந்த
அந்தரி பாலனே சுந்தர கணபதியே
ஞானப்பழம் பெற்ற ஞாலமுதல்வனே
சதுர்த்தி நாயகனே சங்கடம் தீர்ப்பாயே